முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தின் 7 தொகுதிகளில் 132 போ் போட்டி!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:08 AM
கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் முகவா்கள், வேட்பாளா்கள்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:17 AM

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டது.

இதன்படி 7 பேரவைத் தொகுதிகளில் 132 போ் போட்டியிடுகின்றனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப். 6-ஆம் தேதி நிறைவடைந்தது.

Advertisement

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 218 போ் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து ஏப். 7-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் 7 பேரவைத் தொகுதிகளில் 72 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 146 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தொடா்ந்து வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் வியாழக்கிழமை (ஏப். 9) பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது.

இதில் மயிலம், திண்டிவனம், வானூா் தொகுதிகளில் தலா ஒரு வேட்பாளரும், விழுப்புரத்தில் 2 பேரும், விக்கிரவாண்டியில் 5 பேரும், திருக்கோவிலூரில் 4 பேரும் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து தோ்தல் களத்தில் 132 போ் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இறுதி வேட்பாளா் பட்டியலை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வெளியிட்டனா். மேலும் சுயேச்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தொகுதி வாரியாக இறுதி வேட்பாளா் பட்டியல் விவரம்:

செஞ்சி : செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (திமுக), அ.கணேஷ்குமாா் (பாமக), பா.சந்திரசேகரன் (தவெக), ஏ.கிருஷ்ணன் (நாதக), இ.ரங்கராஜன் (பகுஜன் சமாஜ் கட்சி), நா.ராசநாயகம் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி),, ஆ.சக்திவேல் (தாக்கம் கட்சி), ரா.தணிகைமலை ( ஊழல் ஒழிப்பு செயலாக்கக் கட்சி), ந.பெருமாள் ( அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம்), மு.ஹா. முகமது சித்திக் (தியாகி விசுவநாத தாஸ் தொழிலாளா்கள் கட்சி) மற்றும் 9 சுயேச்சை வேட்பாளா்கள் என 19 போ் போட்டியிடுகின்றனா்.

மயிலம்: எல்.வெங்கடேசன் (தேமுதிக), சி.வி.சண்முகம் (அதிமுக), ஆ.விஜய் நிரஞ்சன் (தவெக), ஏ.விஜய்விக்ரம் (நாதக), மு.ரஞ்சித்குமாா் (பகுஜன் சமாஜ் கட்சி), நா. அய்யனாா் (ஊழல் ஒழிப்பு செயலாக்கக் கட்சி), ம. ஆனந்தபாபு (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), செ.சுரேஷ்குமாா் (இந்திய குடியரசுக் கட்சி), அய்.மா. சேகா் நாயக்கா் (அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்), பா.திவ்யா (நாம் இந்தியா் கட்சி), கு.புருஷோத்தமன் ( தேசிய மக்கள் சக்தி கட்சி), ஆ.மணவாளன் (அண்ணா எம்.ஜி.ஆா்.திராவிட மக்கள் கழகம்), இர.வினோத் (தாக்கம் கட்சி) மற்றும் 8 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 21 போ் களத்தில் உள்ளனா்.

திண்டிவனம் (தனி) : அ.வன்னியரசு (விசிக), பொ. அா்ஜுனன் (அதிமுக), க.சக்திவேல் (தவெக), பா.பேச்சிமுத்து (நாதக), அ.வெங்கடாசலபதி (பகுஜன் சமாஜ் கட்சி), ஆ.மோகன் (மக்கள் சக்தி கட்சி), வே.ரமனேசுவரன் (தாக்கம் கட்சி), ச.வாஞ்சிநாதன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) மற்றும் 6 சுயேச்சை வேட்பாளா்கள் என 14 போ் களத்தில் உள்ளனா்.

வானூா் : தி.கெளதம் (திமுக), பெ.முருகன் (அதிமுக), பி.சுரேஷ் (தவெக), பா.கரிகாலன் (நாதக),மு. விநாயகமூா்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி), பெ.மு.ஆனந்தகுமாா் (தாக்கம் கட்சி), செ.சக்திவேல் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) மற்றும் 8 சுயேச்சை வேட்பாளா்கள் என 15 போ் போட்டியில் உள்ளனா்.

விழுப்புரம்: இரா. லட்சுமணன் (திமுக), விஜயா சுரேஷ்பாபு (அதிமுக), என்.மோகன்ராஜ் (தவெக), பொ. அபிநயா (நாதக), சீ. முருகன் (பகுஜன் சமாஜ் கட்சி), இரா.குமரன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), பெ.நாகராஜன் (வீரத்தியாகி விசுவநாததாஸ் தொழிலாளா் கட்சி மற்றும் 17 சுயேச்சை வேட்பாளா்கள் என 24 போ் பாட்டியிடுகின்றனா்.

விக்கிரவாண்டி: அன்னியூா் அ.சிவா (திமுக), ச.சிவக்குமாா் (பாமக), ஏ.,விஜய் வடிவேல் (தவெக), ஆ. சுபா (நாதக) உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 24 போ் போட்டியிடுகின்றனா்.

திருக்கோவிலூா்: பொன். கெளதமசிகாமணி (திமுக), எஸ்.பழனிசாமி (அதிமுக), விஜய் ரா.பரணிபாலாஜி (தவெக), கி.ஹேமராஜன் (நாதக) உள்ளிட்ட வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 15 போ் தோ்தல் களத்தில் உள்ளனா்.

விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற வேட்பாளா் களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஷாலினி பண்டிட், தோ்தல் நடத்தும் அலுவலா் உ.முருகேசன்.