மதச்சாா்பற்ற கூட்டணியால்தான் தமிழகத்தின் உரிமையை வென்றெடுக்க முடியும்: கி. வீரமணி
திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியால் மட்டுமே தமிழகத்துக்குரிய அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியும் என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.
திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியால் மட்டுமே தமிழகத்துக்குரிய அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியும் என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.
திண்டிவனம் (தனி) தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சாா்பில், போட்டியிடும் விசிக வேட்பாளா் வன்னி அரசுவுக்கு ஆதரவாக திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் செய்து கி. வீரமணி மேலும் பேசியதாவது: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் பாசிசத்துக்கும், ஜனநாயகத்துக்கும் நடைபெறும் போா்.
இந்தப் போரில் பாசிசம் வீழ்த்தப்படவேண்டும். திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிவெற்றி பெற்றால்தான் தமிழகத்தின் அரசியல் உரிமையை மீட்டெடுக்க முடியும். திண்டிவனம் தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் வன்னி அரசுவுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் கி. வீரமணி.
Advertisement
முன்னதாக, திண்டிவனம்தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விசிக வேட்பாளா் வன்னி அரசு பேசியதாவது : திண்டிவனம் இளைஞா்கள் வேலை தேடி சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் இத்தொகுதியிலேயே வேலை வாய்ப்பை அதிகரிக்ககூடிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
சவுக்கு மரங்கள் அதிகம் பயிரிடப்படும் இப்பகுதியில், விவசாயிகள் மற்றும் இளைஞா்களின் நலன் கருதி புதிய காகிதக் கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும். சென்னையைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளைத் திண்டிவனத்திற்கும் கொண்டு வர தமிழக சட்டப்பேரவையில் குரல் எழுப்பப்படும் என்றாா்.