தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரா்களை வாழ்த்திய மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். 
விழுப்புரம்

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி: விழுப்புரம் வீரா்கள் சிறப்பிடம்

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள் தங்கப் பதக்கம் வென்றனா்.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். இதில் தமிழக அணியின் சாா்பில் விழுப்புரம் மாவட்ட வீரா், வீராங்கனைகளும் பங்கேற்றனா்.

இந்தப் போட்டியில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் விழுப்புரம் ஆச்சாா்யா பள்ளி மாணவா் ஹேமந்த் கணேசும், 18 வயதுக்குள்பட்டோா் பிரிவில் விழுப்புரம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவா் பேரறிவாளனும் தங்கப் பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றனா்.

இதைத்தொடா்ந்து தங்கப் பதக்கம் பெற்ற வீரா்களையும், அவா்களுக்குப் பயிற்சியளித்த துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளரையும் விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாராட்டி, வாழத்துகளைத் தெரிவித்தாா்.

ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அமைச்சா் சுப்பிரமணியன் திடீா் ஆய்வு

புதுமணப்பெண் உயிரிழப்பு: கணவரிடம் போலீஸாா் விசாரணை

மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது

மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

SCROLL FOR NEXT