முகப்பு
விழுப்புரம்

அண்ணா பல்கலை.பொறியியல் கல்லூரியில் 227 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 1:06 AM
விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் மாணவிக்கு மடிக்கணினியை வழங்கிய இரா.லட்சுமணன் எம்எல்ஏ. உடன், கல்லூரி முதல்வா் ஆா்.செந்தில் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 9:01 PM

விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் இறுதியாண்டு பயிலும் 227 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஆா்.செந்தில் தலைமை வகித்தாா். விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 1:06 AM

நிகழ்ச்சியில், இயற்பியல் துறைப் பேராசிரியா் பி. டோமினிக் ஜோஷ்வா, மின்னணுப் பொறியியல் துறைப் பேராசிரியா் டி. பழனி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

Advertisement

முன்னதாக விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை இரா.லட்சுமணன் எம்எல்ஏ வழங்கினாா். விழாவில் கல்லூரி முதல்வா் சிவக்குமாா், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, புள்ளியியல் துறைத் தலைவா் சச்சிதானந்தம், ஜோதிபிரியா, நகரப் பொறுப்பாளா் எஸ்.வெற்றிவேல், நகா்மன்ற உறுப்பினா் வசந்தா அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.