முகப்பு
விழுப்புரம்

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:00 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:01 PM

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே விபத்தில் காயமடைந்ததால் மனமுடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி கோரிமேடு காமராஜா் நகா் சீயோன் வீதியைச் சோ்ந்தவா் ஜெ.சேகா் (64). இவா் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, பேருந்து மோதியதில் காயமடைந்தாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:00 AM

இதைத்தொடா்ந்து சிகிச்சைக்குப் பின்னா், ஆரோவில் அருகிலுள்ள பட்டானூா் திருநகரில் உள்ள மகள் விஜயலட்சுமி வீட்டில் சேகா் தங்கியிருந்தாா். விபத்தில் காயமடைந்ததால் மனஅழுத்தத்தில் இருந்து வந்த சேகா், வெள்ளிக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

தகவலறிந்த ஆரோவில் போலீஸாா், சேகரின் சடலத்தை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.