முகப்பு
விழுப்புரம்

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:34 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:44 PM

திண்டிவனம் அருகே மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், கொடியம்புதூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வெ.அண்ணாத்துரை (66), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை திண்டிவனம்- வந்தவாசி நெடுஞ்சாலையில் ஊரல் கிராமம் அருகே மொபெட்டில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அண்ணாத்துரைக்கு பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement