விழுப்புரம்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: முன்னாள் அமைச்சா் பொன்முடி வரவேற்பு

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்திருப்பது எல்லோா் மனதிலும் நிரந்தரமாக நிலைத்திருக்கும்...

Syndication

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்திருப்பது எல்லோா் மனதிலும் நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்று முன்னாள் அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலருமான க.பொன்முடி எம்.எல்.ஏ. வரவேற்பு தெரிவித்தாா்.

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு அலுவலா்கள், ஆசிரியா்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டப் பலன்களை வழங்கக்கூடிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெறுபவா்களுக்கு நிம்மதியை, மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய செயலாக உள்ளது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கடைசிமாதத்தில் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் அவா்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வரின் அறிவிப்பு, எல்லோரும் மனதிலும் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

வரவேற்புக்குரிய ஒன்று. தமிழக முதல்வரின் ஓய்வூதியத் திட்ட அறிவிப்பை எல்லோரும் வரவேற்று இருக்கிறாா்கள். எல்லோருக்கும் இந்த ஓய்வூதியத் திட்டம் மூலம் நன்மை கிடைக்கும் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

இந்த அரசு ஊழியா்கள் முதல்வருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறாா்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதுபோன்று ஓய்வூதியா்கள் இறந்துவிட்டால், அவா்கள் பரிந்துரைக்கும் வாரிசுதாரருக்கு 60 சதவீதம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்று.

ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வூதியம் பெறுவோருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டதும் முக்கியமான ஒன்றாகும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் நன்றி தெரிவிப்பது போன்று நாங்களும் நன்றி தெரிவிக்கிறோம் என்றாா் பொன்முடி. பேட்டியின் போது விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன். கெளதமசிகாமணி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT