விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் திமுகவின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்.எல்.ஏ. உடன், மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா். 
விழுப்புரம்

திராவிடப் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்: க.பொன்முடி

விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் திராவிடப் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்று திமுகவின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா்.

Syndication

விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் திராவிடப் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்று திமுகவின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா்.

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைச் செயலா்கள் டி.என். முருகன், இரா.கற்பகம் , தலைமைக் கழக வழக்குரைஞா் சுவை.சுரேஷ் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்று, கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கி திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி மேலும் பேசியது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ வேண்டும் என்று அறிவித்து, திராவிடப் பொங்கலாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா். அதனடிப்படையில் விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் திமுகவினா் திராவிடப் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறுவிதமான போட்டிகளை கட்சியினா் நடத்தி, அதில் பொதுமக்களைப் பங்கேற்க வைக்க வேண்டும்.

திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் முழுமையாக கொண்டுசோ்க்க வேண்டும். ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பணியைத் தீவிரப்படுத்துவதுடன், அரசின் திட்டங்களை எடுத்துரைத்து, அதை வாக்குகளாக பெறும் பணியில் பாகமுகவா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் ஈடுபட வேண்டும் என்றாா் பொன்முடி.

இந்த கூட்டத்தில் திமுக செயற்குழு உறுப்பினா்கள் அப்துல் சலாம், டி.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜசேகா், பக்தவத்சலு, உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT