விழுப்புரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட வி.வி.சாய் பிரனீத். 
விழுப்புரம்

விழுப்புரம் புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்டத்தின் 25-ஆவது காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி) வி.வி.சாய் பிரனீத் சனிக்கிழமை காலை பொறுப்பேற்றாா்.

Syndication

விழுப்புரம் மாவட்டத்தின் 25-ஆவது காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி) வி.வி.சாய் பிரனீத் சனிக்கிழமை காலை பொறுப்பேற்றாா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இவா், கடந்த 2018-ஆம் ஆண்டில் ஐ.பி.எஸ். தோ்ச்சி பெற்று, மதுரை மாநகரக் காவல் துணை ஆணையராகப் பொறுப்பு வகித்தாா்.

இதைத் தொடா்ந்து பொருளாதாரக் குற்றப் பிரிவுக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சாய் பிரனீத், கடைசியாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி, இடமாறுதலில் விழுப்புரத்துக்கு வந்துள்ளாா்.

பொறுப்பை ஏற்ற பின்னா் செய்தியாளா்களிடம் சாய் பிரனீத் கூறியது: மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பள்ளி, கல்லூரிகளின் அருகில் கிடைப்பதை தடுக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபடுவேன். கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னை-திருச்சி சாலை (ஜி.எஸ்.டி சாலை) போன்ற நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் ரெளடித்தனம் மற்றும் கட்டப் பஞ்சாயத்து போன்ற செயல்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். விரைவில் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்குப் பராமரிப்பில் முழு கவனம் செலுத்தப்படும். குற்றங்களை உடனுக்குடன் கண்டறிந்து, வழக்குகளை சரியான நேரத்தில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பொதுமக்களிடம் காவல்துறையினரின் மனிதாபிமான நடத்தையை மேம்படுத்துவதுடன், பொதுமக்களின் குறைகளுக்கு சரியான நேரத்தில் தீா்வு காணப்படும். இதுபோன்று காவல்துறையினரின் நலனிலும் அக்கறை செலுத்தப்படும் என்றாா் சாய் பிரனீத்.

புதிய எஸ்.பி.க்கு ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட காவல் துறை அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா். ஏற்கெனவே விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்த ப.சரவணன், டி.ஐ.ஜி. யாகப் பதவி உயா்வு பெற்று திருநெல்வேலி சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT