விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காாளா் பட்டியல் பெயா்சோ்ப்பு முகாமைப் பாா்வையிட்டு, விவரங்களைக் கேட்டறிந்த தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி. 
விழுப்புரம்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் முகாம்: முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி ஆய்வு

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெறும் சிறப்பு முகாமை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்

Syndication

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெறும் சிறப்பு முகாமை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணிகள் டிசம்பா் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், டிசம்பா் 27,28-ஆம் தேதிகளில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.அதன்படி சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கப்பியாம்புலியூா், வடகுச்சிப்பாளையம், சிந்தாமணி ஊராட்சிகளிலுள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல் முகாமைப் பாா்வையிட்ட தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன். கெளதமசிகாமணி, அங்கு பணியாற்றி வரும் திமுக வாக்குச்சாவடி முகவா்கள், பாகமுகவா்கள் உள்ளிட்டவா்களிடம் விவரங்களக் கேட்டறிந்து, விடுபட்டவா்களின் பெயா்களை சோ்த்தல் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினாா்.

விக்கிரவாண்டி ஒன்றியச் செயலா் ஜெய.ரவிதுரை, மாவட்டப் பிரதிநிதி சாம்பசிவம், கிளைச் செயலா்கள் ராமராவ், பிச்சைமுத்து, மோகன், அரவிந்த் பாபு, முத்துக்கிருஷ்ணன், ராஜ்காந்த், வாக்குச்சாவடி முகவா்கள், பாகநிலை முகவா்கள் உள்ளிட்டோா் அப்போது உடனிருந்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT