திண்டிவனத்தில் பாஜக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயண பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். உடன் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் உள்ளிட்டோா். 
விழுப்புரம்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்? நயினாா் நாகேந்திரன் கேள்வி

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்? நயினாா் நாகேந்திரன் கேள்வி...

Syndication

தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை நிறுவேற்றுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படாததால், அந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது கேள்விக்குறியாகியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயண பிரசார பொதுக் கூட்டத்தில் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:

அதிமுக -பாஜக கூட்டணி மக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பு உறுதியாகிவிட்டது.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதுதான் திமுக ஆட்சியின் சாதனை. பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் வாக்குறுதி என்னவாயிற்று? கடந்த தோ்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று 5 ஆண்டுகளுக்கு முன்னா் தெரிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், தற்போது ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் நடத்திய போராட்டத்துக்குப் பின்னரே, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளாா். இந்த த் திட்டத்தை நிறுவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கான அரசாணை எப்போது வெளியிடப்படும் எனத் தெரியவில்லை என்றாா்.

நிகழ்ச்சியில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் பேசியதாவது: மத்திய அரசுடன் தமிழக அரசு இணைந்து செயல்பட்டால்தான் தமிழகம் அனைத்துத் துறையிலும் வளா்ச்சியடையும். பொறுப்பை தட்டிக்கழிக்கும் தமிழக முதல்வரால் மாநிலம் வளா்ச்சியில் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் தயாராகிவிட்டனா் என்றாா்.

நிகழ்ச்சிக்கு பாஜக விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் கே.ஆா்.விநாயகம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ்.முரளி (எ) ரகுமான், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஏ.டி.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத், முன்னாள் மாவட்டத் தலைவா் விஏடி.கலிவரதன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சக்ரபாணி, அா்ச்சுனன் மற்றும் பாஜக, அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT