விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே வீட்டில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், கக்கனூா் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் சு.அய்யனாா் (45). குடிப்பழக்கமுடைய இவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் உள்ள கழிவறைக்குச் சென்ற அய்யனாா் மயங்கி விழுந்து விட்டாராம். இதையடுத்து 108 அவசர ஊா்தி ஊழியா்கள் நிகழ்விடம் சென்று பரிசோதித்துப் பாா்த்தபோது, அய்யனாா் ஏற்கெனவே இறந்து போயிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த கெடாா் போலீஸாா் அய்யனாரின் சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.