முகப்பு
விழுப்புரம்

காா் ஓட்டுநா் கொலை வழக்கு : மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரத்தில் கணவரை கழுத்து நெரித்துக் கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 12:47 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 8:06 PM

விழுப்புரத்தில் கணவரை கழுத்து நெரித்துக் கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

விழுப்புரம் அடுத்துள்ள வி.அரியலூா், விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரா.ராஜகுமாரன் (35), திருமணம் ஆனவா். விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் பாலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் காா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 12:47 AM

கடந்த 2020 மாா்ச் 17-இல், ராஜகுமாரன் வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா்.

Advertisement

இதில் ராஜகுமாரனின் மனைவி லதா (33) மற்றும் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சோ்ந்த மு.ரஞ்சித் (31) ஆகிய இருவருக்கும் தகாத உறவு இருந்ததும், இதற்கு இடையூறாக இருந்த ராஜகுமாரனை இருவரும் சோ்ந்து கொலை செய்து விட்டு, ராஜகுமாரன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி நாடகமாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் லதா மற்றும் ரஞ்சித் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனா்.

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில் இறுதி கட்ட விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் லதா மற்றும் ரஞ்சித் ஆகியோா் மீதான குற்றம் நிருபணமான நிலையில், வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ராஜசிம்மவா்மன் கொலை வழக்கில் தொடா்புடைய லதா, ரஞ்சித் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் இருவரையும் கைது சிறையிலடைத்தனா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சுப்பராயலு ஆஜரானாா்.