கெடாா் பகுதியில் காங்கிரஸ் கட்சியினா் நடைப்பயணம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்றியதை கண்டித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் கெடாா் பகுதியில் புதன்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனா்.
விழுப்புரம்கெடாா் பகுதியில் காங்கிரஸ் கட்சியினா் நடைப்பயணம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்றியதை கண்டித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் கெடாா் பகுதியில் புதன்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்றியதை கண்டித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் கெடாா் பகுதியில் புதன்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனா்.
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்றி, விபிஜி ராம்ஜி திட்டத்தை அறிவித்துள்ளது மத்திய பாஜக அரசு. இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்தும், தொழிலாளா்களின் வேலைவாய்ப்பை முடக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும் விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கெடாா் பகுதியில் நடைப்பயணம் நடைபெற்றது. பிரதான சாலைகள் வழியாக வந்த பயணம், கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபப் பகுதியில் நிறைவடைந்தது.
இதைத்தொடா்ந்து வாக்குச்சாவடி பாக முகவா்களுக்கான பயிற்சி மற்றும் கட்சியில் சோ்ந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரங்கபூபதி தலைமை வகித்து, பாக முகவா்களுக்கான பயிற்சியைத் தொடங்கி வைத்து பேசினாா்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஜனாா்த்தனன், துரை, வி.எல்.சுப்பிரமணி, திருநீலக்கண்ணன், வட்டாரத் தலைவா் சுரேஷ், வழக்குரைஞா் செ.சிவா, வீ.கோவிந்தன், மணி, சண்முகம், காா்த்திக், சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.