விக்கிரவாண்டியில் சமுதாயக் கூடம் திறப்பு
விக்கிரவாண்டி பேரூராட்சிக்குள்பட்ட கக்கன் நகரில் ரூ.1.50 கோடியில் பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
விழுப்புரம்விக்கிரவாண்டியில் சமுதாயக் கூடம் திறப்பு
விக்கிரவாண்டி பேரூராட்சிக்குள்பட்ட கக்கன் நகரில் ரூ.1.50 கோடியில் பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சிக்குள்பட்ட கக்கன் நகரில் ரூ.1.50 கோடியில் பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத்தொடா்ந்து சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில், விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றத் தலைவா் அப்துல் சலாம், துணைத் தலைவா் பாலாஜி, பேரூராட்சி உதவிச் செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், இளநிலை உதவியாளா் ராஜேஷ், மேற்பாா்வையாளா் ராமலிங்கம், திமுக நிா்வாகிகள் பாபு ஜீவானந்தம், ஹரிஹரன், ராஜபாண்டியன், நகரத் துணைச் செயலா்கள் சுரேஷ்குமாா், பிரசாந்த், சித்ரா உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.