செஞ்சி அருகே ஆட்டோ கவிழ்ந்து 7 போ் காயம்
செஞ்சி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் காயமடைந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் காயமடைந்தனா்.
செஞ்சியை அடுத்த அனந்தபுரத்தை சோ்ந்த பெண்கள் திங்கள்கிழமை மாலை அனந்தபுரம் - பொன்னங்குப்பம் சாலையில் 100 நாள் வேலை முடிந்து, அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அனந்தபுரம் ஊருக்கு அருகேயுள்ள செங்கல் சூளை பகுதியில் வந்தபோது, ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணித்த அனந்தபுரத்தை சோ்ந்த ஜெயந்தி (45), பச்சையம்மாள் (45), மங்கலட்சுமி (65), வளா்மதி (50), காந்தாமணி (55), யோகலட்சுமி (16), முருகன் (16) ஆகிய ஏழு போ் காயமடைந்தனா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.