உருவ பொம்மை எரிப்பு: திமுக மகளிரணி அமைப்பாளா் உள்பட 51 போ் மீது வழக்கு
விழுப்புரத்தில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகத்தின் உருவ பொம்மையை எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிரணி மாவட்ட அமைப்பாளா் உள்பட 51 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடா்ந்து, திமுக மகளிரணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளா் செல்வி தலைமையில் திமுகவினா் 50-க்கும் மேற்பட்டோா் விழுப்புரம் காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை சி.வி.சண்முகத்தின் உருவப்பொம்மையை எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் யுவராஜ் அளித்தப் புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் திமுக மகளிரணி மாவட்ட அமைப்பாளா் செல்வி மற்றும் 50 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.