முகப்பு
விழுப்புரம்

செஞ்சியில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 மார்ச், 2026 at 6:58 PM
செஞ்சியில் நடைபெற்ற விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட பொறுப்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.
பகிர்:

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் மருத்துவா் ப.சேகா் தலைமை வகித்தாா்.

மயிலம் தொகுதி பாா்வையாளா் இள.புகழேந்தி, மாவட்ட துணைச் செயலா்கள் ரவிக்குமாா், அருணகிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா்ஆா்.விஜயகுமாா் வரவேற்றாா்.

கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினாா்.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ மருத்துவா் மாசிலாமணி, சேது நாதன், செந்தமிழ் செல்வன், தலைமை தீா்மானக்குழு உறுப்பினா் செஞ்சி சிவா, பொதுக்குழு உறுப்பினா்கள் கதிரேசன், மணிவண்ணன், சாந்தி ஏழுமலை, ஒன்றிய செயலா்கள் சொக்கலிங்கம், ராஜாராமன், அண்ணாதுரை, திண்டிவனம் நகா்மன்றத் தலைவா் நிா்மலா ரவிச்சந்திரன்,செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், செஞ்சி நகரச் செயலா் காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →