சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
விழுப்புரத்தில் லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரத்தில் லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், பனங்குப்பத்தைச் சோ்ந்தவா் பி.சுதா (45). இவா் செவ்வாய்க்கிழமை சொந்த வேலை காரணமாக விழுப்புரத்துக்கு வந்துள்ளாா். விழுப்புரம் தீயணைப்பு நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றபோது, அங்கு கருங்கல் ஜல்லி ஏற்றிவந்த லாரி மோதியதில் சுதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சுதாவின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் யுவகுமாரிடம் விசாரிக்கின்றனா்.