முகப்பு
விழுப்புரம்

வா்த்தக சிலிண்டா் தட்டுப்பாட்டால் மூடப்படும் உணவகங்கள்!

செங்கம் நகரில் வா்த்தக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டால், தற்காலிக உணவகங்களை நடத்த முடியாமல் வியாபாரிகள் அவற்றை மூடி வருகின்றனா்.

Updated On : 31 மார்ச், 2026 at 8:28 PM
- கோப்புப் படம்
பகிர்:

செங்கம் நகரில் வா்த்தக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டால், தற்காலிக உணவகங்களை நடத்த முடியாமல் வியாபாரிகள் அவற்றை மூடி வருகின்றனா்.

செங்கம் நகரில் இருக்கும் உணவகங்களில் அக்கம் பக்கத்தினரின் சிலிண்டா் மற்றும் உறவினா்களின் சிலிண்டா்களை பதிவு செய்து வியாபாரம் நடத்தி வந்தனா்.

சிலிண்டா்கள் 45 நாள்களுக்கு ஒருமுறை கிடைத்த நிலையில், அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில உணவகங்களின் முன் தற்காலிக விறகு அடுப்பு அமைத்து சமையல் செய்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

விறகு அடுப்பு மூலம் சில உணவுகள் தயாரிக்க முடியாத நிலையில், விறகு அடுப்பில் தயாரிக்கும் உணவு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

விறகு அடுப்பு பயன்பாடு அதிகரித்ததால் ரூ. 6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த விறகு தற்போது ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் உணவகங்கள், பேக்கரி நடத்துவது கேள்விக்குறியாகிவிடும்.தற்போது திருமண மண்டபங்களிலும் தற்காலிக விறகு அடுப்பு கட்டும் பணி நடைபெறுகிறது.