முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற முதியவா் மரணம்

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 மே 2026, 1:25 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலைய பகுதியில் கடந்த சில நாள்களாக சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சுற்றித் திரிந்தாா். இந்த நிலையில் புதன்கிழமை காலை முதியவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.