காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு என்று செல்வாக்கு உள்ள தொகுதிகளே பெரும்பாலும் அக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு என்று செல்வாக்கு உள்ள தொகுதிகளே பெரும்பாலும் அக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த 41 தொகுதிகளை எவை என்பது தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையிலான குழுவினரும் மூன்று கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை வியாழக்கிழமை மாலை சந்தித்தார்.
41 தொகுதிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கருணாநிதியும் இளங்கோவனும் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியது:-
திமுக தலைமையோடு பேச்சுவார்த்தை சுமூக நடைபெற்றது. கருணநிதியை 6-ஆவது முறையாக முதல்வராக்குவதற்கு காங்கிரஸôர் பாடுபடுவோம். திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றார் அவர். 41 தொகுதிகள் விவரம்: அதன்பின், காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.
தொகுதிகள்: திருத்தணி, அம்பத்தூர், ராயபுரம், மயிலாப்பூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), மதுரவாயல், ஆற்காடு, ஓசூர், கலசப்பாக்கம், செய்யாறு, ஆத்தூர் (தனி), சங்ககிரி, நாமக்கல், கோபிசெட்டிபாளையம், உதகமண்டலம், காங்கேயம், தாராபுரம் (தனி), சூலூர், கோவை (தெற்கு), வேடசந்தூர், கரூர், திருச்சி கிழக்கு, முசிறி, ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில் (தனி), வேதாரண்யம், நன்னிலம், பாபநாசம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மதுரை (வடக்கு), திருமங்கலம், சிவகாசி, முதுகுளத்தூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 41 தொகுதிகள் ஆகும்.
காங்கிரஸ்க்கான தொகுதிகள்: மக்களவைக்கு ஒரு தொகுதி என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் காங்கிரஸக்குச் செல்வாக்கு உள்ள தொகுதிகளாகவே ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருவேளை, அதிமுகவுடன் - தமாகா கூட்டணி ஏற்பட்டால், காங்கிரஸ் வேட்பாளர்கள் தமாகா வேட்பாளர்களையே எதிர்த்துக் களம் காணும் வகையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக - காங்கிரஸ் நேரடிப் போட்டி: அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும், கூட்டணிக் கட்சியினரும் அதிமுகவின் சின்னத்திலேயே போட்டியிட உள்ளனர். காங்கிரஸக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 40 தொகுதிகளில் அதிமுக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கேயம் தொகுதியில் மட்டும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.