முகப்பு
தமிழகத் தேர்தல் களம் 2016

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி உறுதி: குர்ஷித் அகமது சையத்

திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என காங்கிரஸின் அகில இந்திய சிறுபான்மைப்பிரிவு தலைவர் குர்ஷித் அகமது சையத் தெரிவித்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:14 PM
பகிர்:

திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என காங்கிரஸின் அகில இந்திய சிறுபான்மைப்பிரிவு தலைவர் குர்ஷித் அகமது சையத் தெரிவித்தார்.

 திருச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

 தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவான நிலையில் உள்ளது.  அதிமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் தமிழக மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்த ஆட்சியில் மாணவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர். தொழில்கள் நசிவடைந்துள்ளன. தொழில்துறையில் தமிழகம் கடைசி இடத்தை வகிக்கிறது.

 வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கடன் தொல்லையால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நீங்கள் வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

 மேற்கண்ட அவல நிலையிலிருந்து விடுபட, மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அவர்களுக்கான மாற்றமாக திமுக - காங்கிரஸ் கூட்டணி திகழ்கிறது. தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார் குர்ஷித்.

 கூட்டத்தில் காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த தமிழக பார்வையாளர் ஷேக் மஸ்தான் வாலி, மாநில தலைவர் அஸ்லாம் பாஷா, திருச்சி மாவட்ட நிர்வாகிகள், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் ஜெரோம் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →