அனைத்து தொழில் வணிக நிறுவனங்களுக்கும் 16-ம் தேதி விடுமுறை அளிக்க வர்த்தக சபை கோரிக்கை
வரும் 16-ம் தேதி திங்கள்கிழமை தேர்தலை முன்னிட்டு புதுவையில் அனைத்து தொழில் வணிக நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என புதுச்சேரி வர்த்தக சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
வரும் 16-ம் தேதி திங்கள்கிழமை தேர்தலை முன்னிட்டு புதுவையில் அனைத்து தொழில் வணிக நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என புதுச்சேரி வர்த்தக சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன் பொதுச் செயலர் சு.குணசேகரன் வெளியிட்ட அறிக்கை:
வரும் 16-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை புதுவையில் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் அந்நாளில் விடுமுறை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒவ்வொரு நிறுவன ஊழியர்கள், குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்கை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள், அவர்தம் குடும்பத்தினர் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் தவறாது தொடர்புடைய வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்து புதுவை மாநிலத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்றார் குணசேகரன்.