தமிழகத் தேர்தல் களம் 2016

நாமக்கல் மாவட்டம்: 105 பேரில் முடிசூடப்போகும் 6 பேர் யார்? 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் போட்டியிடும் 105 பேரில் முடிசூடப்போவது யார் என்பது 12 மணிக்குள் தெரிந்துவிடும்.

பெ. விஜயபாஸ்கர்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் போட்டியிடும் 105 பேரில் முடிசூடப்போவது யார் என்பது 12 மணிக்குள் தெரிந்துவிடும்.

 நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம்(எஸ்டி), ராசிபுரம்(எஸ்சி), திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 16 ஆம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் விவரம்: ராசிபுரம்:

மொத்த வாக்காளர்கள், ஆண்: 1,09,264, பெண்: 1,12,483  மொத்தம்: 2,21,747. பதிவான ஓட்டுகள், 1,85,170. சேந்மங்கலம்:மொத்த வாக்காளர்கள், ஆண்: 1,13,081, பெண்: 1,16,746, திருநங்கை: 8, மொத்தம்: 2,29,835, பதிவான ஓட்டுகள், 1,88,443.

நாமக்கல்:மொத்த வாக்காளர்கள், ஆண்: 1,18,136, பெண்: 1,24,388, திருநங்கை: 39, மொத்தம்: 2,42,563, பதிவான ஓட்டுகள், 1,92,391.

 பரமத்திவேலுார்:மொத்த வாக்காளர்கள், ஆண்: 1,01,372, பெண்: 1,07,660, திருநங்கை: 6, மொத்தம்: 2,08,538, பதிவான ஓட்டுக்கள், 1,73,458. திருச்செங்கோடு:

மொத்த வாக்காளர்கள், ஆண்: 1,06,142, பெண்: 1,10,464, திருநங்கை: 34, மொத்தம்: 2,16,640, பதிவான ஓட்டுக்கள், 1,75,237. குமாரபாளையம்:

மொத்த வாக்காளர்கள், ஆண்: 1,13,888, பெண்: 1,17,063, திருநங்கை: 22, மொத்தம்: 2,30,973, பதிவான ஓட்டுக்கள், 1,86,421. 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும், மொத்தம், 11,01,120 ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம்:நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் கே.பி.பி.பாஸ்கர், காங்கிரஸ் சார்பில் ரா.செழியன், தமாகா சார்பில் என்.இளங்கோ உள்ளிட்ட 15 பேர், சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் சி.சந்திரசேகரன், திமுக சார்பில் கே.பொன்னுசாமி, தேமுதிக சார்பில் எம்.சத்யா உள்ளிட்ட 10 பேர், 

ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் சரோஜா, திமுக சார்பில் வி.பி.துரைசாமி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் அர்ஜூன் ஆகிய 12 பேர், பரமத்தி வேலுார் தொகுதி அதிமுக சார்பில் ஆர்.ஆர்.ராஜேந்திரன், திமுக சார்பில்  கே.எஸ்.மூர்த்தி, தேமுதிக சார்பில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர், திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் பொன்.சரஸ்வதி, திமுக சார்பில் பார்.இளங்கோவன், தேமுதிக சராபில் விஜய்கமல் உள்ளிட்ட 24 பேர்,குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் பி.தங்கமணி, திமுக சார்பில் யுவராஜ், தேமுதிக சார்பில் மாதேஸ்வரன் உள்ளிட்ட 25 பேர் போட்டியிடுகின்றனர்.

6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 105 பேர் போட்டியிடுகின்றனர். இதில் முடிசூடப்போகும் 6 பேர் யார் என்பது பகல் 12 மணிக்குள் தெரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

SCROLL FOR NEXT