ஆண்டிமடம் பகுதியில் கன மழை: மழைநீரை வெளியேற்றும் பணிகள் ஆய்வு
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் வெள்ள நீா் சூழ்ந்த பயிா்களை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா நேரில் பாா்வையிட்டாா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் வெள்ள நீா் சூழ்ந்த பயிா்களை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா நேரில் பாா்வையிட்டாா்.
ஆண்டிமடம் பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையில் காட்டாத்தூா், வில்லாநத்தம், பட்டணாங்குறிச்சி ஆகிய ஊா்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களை மழைநீா் சூழந்தது. இந்நீரை ஜே.சி.பி மூலம் வெளியேற்றும் பணிகள் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை ஆட்சியா் த.ரத்னா பாா்வையிட்டு, பணிகளை துரிதமாக முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பின்னா் அவா், செந்துறையில் தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களைச் சந்தித்து, முகாமில் உள்ளவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், வருவாய் கோட்டாட்சியா் பூங்கோதை , ஆண்டிமடம் வட்டாட்சியா் தேன்மொழி ஆகிோயா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.