காா் மோதி சிறுவன் காயம்: மக்கள் சாலை மறியல்
அரியலூா் அருகே காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் காயமடைந்தான். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூா் அருகே காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் காயமடைந்தான். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூரை அடுத்த வெங்கடகிருஷ்ணபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜதுரை மகன் ரஞ்சித்(7). இச்சிறுவன் அப்பகுதி அரியலூா்-ஜயங்கொண்டம் சாலையை வியாழக்கிழமை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வேகமாக வந்த காா் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதையறிந்த அப்பகுதி மக்கள், ரஞ்சித்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா்கள், காா் ஓட்டுநரைக் கைது செய்யக் கோரியும் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த அரியலூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். மேலும் போலீஸாா், விபத்துக் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.