மாதப் பலன்கள்

நவம்பர் மாதப் பலன்கள் - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - சப்தம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

03.11.2025  அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  பகவான்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

16.11.2025 அன்று தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன் லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

17.11.2025 அன்று தொழில்  ஸ்தானத்தில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

17.11.2025 அன்று தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

27.11.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  பகவான்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் மீண்டும் வேகம் பெறும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது.  சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை.  தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும்,  மரியாதையும் கூடும். பெண்களுக்கு எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை  கூடும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம்  காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பமும் உண்டாகும். முன்பு கிடைத்த அனுபவம் இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும்.  எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

திருவோணம்:

இந்த மாதம்  காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும். அடுத்த வரைநம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும்.   ஏற்கனவே  பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம்.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம்  தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு வீண் அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக  வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள். 

பரிகாரம்: வாராகி தேவியை வணங்குவது.

சந்திராஷ்டம தினங்கள்: நவம் 13, 14, 15

அதிர்ஷ்ட தினங்கள்: நவம் 23, 24

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

SCROLL FOR NEXT