மாதப் பலன்கள்

நவம்பர் மாதப் பலன்கள் - கும்பம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கும்பம் அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரகநிலை:

ராசியில் சனி (வ), ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - தொழில் கர்ம ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

03.11.2025  அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  பகவான்   பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

16.11.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சூரியன் தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

17.11.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

17.11.2025 அன்று ராசியில்  சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

27.11.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  பகவான்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் வாழ்வில் மாற்றம் வரும. நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக  பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து  வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பெண்களுக்கு அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர் கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

 அவிட்டம் 3, 4 பாதம்:

இந்த மாதம்  கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது. பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள். 

சதயம்:

இந்த மாதம்  கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில்  வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:

இந்த மாதம்  எந்தஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடி தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.

பரிகாரம்: அம்மனை வணங்குவது.

சந்திராஷ்டம தினங்கள்: நவம் 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: நவம் 25, 26, 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

SCROLL FOR NEXT