மாதப் பலன்கள்

அக்டோபர் மாதப் பலன்கள் - கன்னி

கிரக மாற்றங்களால் கன்னி ராசிக்கு புதிய நன்மைகள்

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கிரகநிலை:

ராசியில் சூரியன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

08.10.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

10.10.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   ராசிக்கு  மாறுகிறார்.

17.10.2025 அன்று  ராசியில்  இருந்து  சூரியன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

27.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் மனதில் இருக்கும் குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு தைரியம் அதிகரிக்கும். சுணங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஆகியன அகலும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும். வியாபாரம், தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புது தொழிலில் முதலீடு  செய்யும் போது கவனம் தேவை. குடும்பாதிபதி சுக்கிரன் ராசியைப் பார்க்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையும். கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனைகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களுக்கு வீண் விவாதங்களை தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம்  வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.  லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும்  வரலாம்.

அஸ்தம்:

இந்த மாதம்  கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்  சொல்வதை  கேட்டு நிதானமாக  பேசுவது நல்லது.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த முயற்சியிலும்  சாதகமான  பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்.

சித்திரை 1, 2, பாதம்:

இந்த மாதம்  குழந்தைகளின்  கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும். பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி  காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக  இருக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்:     அக் 08, 09

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 17, 18

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டியின் புதிய படம்!

'நான் பொறுப்பேற்க முடியாது' - நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்

கரூர் பலி மனிதனால் நடந்த பேரழிவு! என்ன மாதிரியான கட்சி இது? உயர் நீதிமன்றம் கண்டனம்

பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி, ஒருவர் காயம்

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்?: ஜெயகுமார்

SCROLL FOR NEXT