மாதப் பலன்கள்

அக்டோபர் மாதப் பலன்கள் - துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் புதிய வாய்ப்புகளை வழங்கும்

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

08.10.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

10.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

17.10.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   ராசிக்கு  மாறுகிறார்.

27.10.2025 அன்று  ராசியில்  இருந்து  செவ்வாய், புதன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் சந்தோஷம் அதிகரிக்கும். பல வகையான யோக பலன்களைப் பெற முடியும். சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். மனைவி குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். பெண்களுக்கு சதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். கலைத்துறையினர் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.

சித்திரை 3, 4 பாதம்:

இந்த மாதம்  வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய  வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.

சுவாதி:

இந்த மாதம்  தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை  தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:

இந்த மாதம்  குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள்  வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.

 பரிகாரம்: சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்:     அக் 10, 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 19, 20, 21

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டியின் புதிய படம்!

'நான் பொறுப்பேற்க முடியாது' - நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்

கரூர் பலி மனிதனால் நடந்த பேரழிவு! என்ன மாதிரியான கட்சி இது? உயர் நீதிமன்றம் கண்டனம்

பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி, ஒருவர் காயம்

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்?: ஜெயகுமார்

SCROLL FOR NEXT