மாதப் பலன்கள்

அக்டோபர் மாதப் பலன்கள் - மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் பலவகை முன்னேற்றங்கள்!

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

08.10.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

10.10.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

17.10.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

27.10.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் அறிவுத் திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரத்தால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில்  கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக்கும். கலைத்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு லாபம் உண்டாகும். மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம்  குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

திருவோணம்:

இந்த மாதம்  சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணக்கு வழக்குகளை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம்  எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக் கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக் கும். பெயரும், புகழும் கூடும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று விநாயக பெருமாளை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்:     அக் 17, 18

அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோ 01, 27, 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவிநாசி: பட்டா வழங்கிய இடத்தில் உரிய அளவீடு செய்து தரக் கோரி போராட்டம்

உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டியின் புதிய படம்!

'நான் பொறுப்பேற்க முடியாது' - நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்

கரூர் பலி மனிதனால் நடந்த பேரழிவு! என்ன மாதிரியான கட்சி இது? உயர் நீதிமன்றம் கண்டனம்

பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி, ஒருவர் காயம்

SCROLL FOR NEXT