குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உடனிருப்போர் ஆதரவாக இருப்பார்கள். செலவுகள் கூடினாலும் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்
களுக்கு நிலவிய எதிர்ப்புகள் மறையும். வியாபாரிகள் விற்பனை முறையை மாற்றிக் கொள்வீர்கள். விவசாயிகள் ஊடுபயிர்களால் நன்மை அடைவீர்கள். அரசியல்வாதிகள் உள்கட்சிப்
பூசலில் இருந்து ஒதுங்கி இருப்பீர்கள். கலைத் துறையினர் காரியங்களை முழு ஆர்வத்துடன் செய்வீர்கள். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு வெளிவிளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.