உயர்ந்தவர்களின் உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகளில் மீள்வீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தோரின் பாசத்தில் திளைப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரிகள் தனித்தே வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். விவசாயிகள் நல்ல பெயரை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலைத் துறையினருக்குப் போட்டிகள் குறையும். பெண்களின் இல்லம் தேடி உறவினர்கள் வருவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை