தொழிலில் இலக்குகளை எட்டுவீர்கள். உடனிருப்போர் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். உடல்நலமும், மன வளமும் சிறக்கும். வழக்குகளில் எதிர்பார்த்தவை நடக்கும்.
உத்தியோகஸ்தர்கள் கவனமாக இருக்கவும். வியாபாரிகளுக்கு நல்லவர்களின் அறிவுரை கிடைக்கும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் கவனமாகப் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினர் பயணங்களால் நன்மை அடைவீர்கள். பெண்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - 19, 20