வார பலன்கள் - ரிஷபம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
தொழிலை விரிவுபடுத்த பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு உதவிகளும் கிடைக்கும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவும் இராது.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகுவீர்கள். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் அதிகரிக்கும். கலைத்துறையினர் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்படுவீர்கள்.
பெண்கள் குடும்பப் பெரியவர்களைச் சந்தித்து, அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் தவறான நண்பர்களிடமிருந்து விலகி விடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.