வார பலன்கள் (மே 15 - 21) - சிம்மம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வீர்கள். உற்றார் உறவினர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் வேலைகளை திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் பழைய கடன்களை விரைவாக வசூலிப்பீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் வேகத்துடன் நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய ரசிகர் மன்றங்களைத் திறப்பீர்கள்.
Advertisement
பெண்கள் யோகா, பிரணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.