ஜோதிட கேள்வி பதில்கள்

பி.இ. படித்துள்ள என் மகள் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதே வேலையில் நீடிக்கலாமா? மேற்கொண்டு படிக்கலாமா? திருமண யோகம் எவ்வாறு உள்ளது? எத்தகைய வரன் அமையும்? மூலம் நட்சத்திரமாக இருப்பதால்  சற்று பயப்படுகிறோம். என்ன பரிகாரம் செய்யவேண்டும்? - வாசகர், முகப்பேர்

DIN

உங்கள் மகளுக்கு துலா லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி லக்னத்திலும் பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் பாக்கிய அயன ஸ்தானாதிபதி அயன ஸ்தானத்திலும் அமர்ந்திருக்கிறார்.  மூன்று திரிகோணாதிபதிகளும் ஆட்சி ,உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. களத்திர ஸ்தானாதிபதியும் பாக்கிய ஸ்தானத்தில்  அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியில் ஆட்சி பெறுகிறார். தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி மூலநட்சத்திரத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று பலமுறை எழுதியிருக்கிறோம். அவருக்கு தற்சமயம் மேற்படிப்பு வேண்டாம்.  பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும்  வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT