ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் எம்.பி,ஏ., படித்துள்ளார். வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை, திருமணமும் நடைபெறவில்லை. எப்போது திருமணம் கைகூடும்? பரிகாரம் செய்ய வேண்டுமா? அரசு வேலை கிடைக்குமா?- சந்திரா மகாலிங்கம், ஈரோடு

DIN

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம். லக்னத்தில் கேதுபகவான் இருப்பது சர்ப்பதோஷம். அவருக்கு களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் மறைந்து கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று அயன ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார், தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற அஷ்டமாதியின் தசையில் குருபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். தனியார் துறையில் நல்ல வளர்ச்சி காண்பர். சொந்தத்தொழிலும் தனித்து செய்யலாம். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT