ஜோதிட கேள்வி பதில்கள்

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற என் மகனுக்கு ஐடிஐ படிப்பு பாதியில் நின்று விட்டது. மீண்டும் ஐடிஐ இல் சேர்ந்து படிக்கலாமா? அரசு வேலை கிடைக்குமா? எந்த வயதில் திருமணம் நடைபெறும்? சொந்தத்தில் அமையுமா? பூர்வீக இடத்தில் வீடு கட்டுவாரா? - வாசகி, தஞ்சை

DIN

உங்கள் மகனுக்கு துலா லக்னம், கன்னி லக்னம் அல்ல. பிறப்பில் புத மஹா தசையில் இருப்பு 1 வருடம், 3 மாதங்கள், 1 நாள் என்று வருகிறது.  லக்னாதிபதி உச்சம் பெற்று பாக்கியாதிபதிக்கு நீச்சபங்க ராஜயோகம் கொடுக்கிறார். அவர்களுடன் ஆறாம் வீட்டுக்கிபதியான குருபகவான் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அவருக்கு சுக பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சனிபகவானும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். அதனால் அவருக்கு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறை ஏற்றது. இந்த ஆண்டு மறுபடியும் படிக்க வைக்கலாம். மேலும் தற்சமயம் உச்சம் பெற்ற லக்னாதிபதியின் தசையில் பிற்பகுதியில் நடப்பதால் படிப்பை நல்லமுறையில் முடித்து விடுவார். தனியார் துறையில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பார். பூர்வீகத்தில் சொந்த வீடு கட்டுவார். தன் சம்பாத்தியத்திலும் மனை வாங்குவார். இருபத்தைந்தாம் வயதில் திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT