ஜோதிட கேள்வி பதில்கள்

பட்டப்படிப்பு படித்திருக்கும் நான் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். எப்போது இந்த கஷ்டங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்? அரசாங்க வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், சென்னை

DIN

உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று பன்னிரண்டாம் வீட்டில் இருப்பது விசேடம். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்திலும் தன பாக்கியாதிபதி சுக்கிரபகவான் தொழில் ஸ்தானத்திலும் அமர்ந்து சமசப்தமமாக பார்வை செய்கிறார்கள். தற்சமயம் ராகுபகவானின் தசையில் லக்னாதிபதியின் புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கிறது. அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் உங்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைத்து விடும். லாப ஸ்தானம் வலுவாக உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT