ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு அரசு ஆசிரியர் பணி கிடைக்குமா? எனது தந்தையின் பூர்வீக வீடு இருந்த நிலத்திலேயே வீடு கட்டலாமா?  எப்போது வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கும்? பித்ரு தோஷம் உள்ளதா? புத்திர பாக்கியம் கிடைக்குமா?  -  வாசகர், நாமக்கல்

தினமணி

உங்களுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. தர்மகர்மாதிபதிகள் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருப்பது சிறப்பு. லாப ஸ்தானத்தில் குடும்பாதிபதி உச்சம் பெற்று லக்னாதிபதி மற்றும் சந்திரபகவான்களுடன் இணைந்து இருக்கிறார். தற்சமயம் குருமஹா தசை முடியும் தருவாயில் உள்ளதால் வேலையில் தடை தடங்கல்கள் என்று பெரியதாக இராது. வேலை போனாலும் உடனடியாக மற்றொரு வேலை அமைந்துவிடும். அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு வேலையும் கிடைத்துவிடும். உங்களுக்கு பித்ரு தோஷம் இல்லை. கவலைப்படாமல் பூர்வீக வீடு இருந்த நிலத்திலேயே வீடு கட்டலாம். அதுவும் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அமையும். உங்கள் மனைவிக்கு தற்சமயம் ஆட்சி பெற்ற மாங்கல்ய ஸ்தானாதிபதியின் தசையில் பூர்வபுண்ணியாதிபதியின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் புத்திரபாக்கியம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT