ஜோதிட கேள்வி பதில்கள்

நான் கடன் சுமையால் அதிகம் பாதித்துள்ளேன். எப்போது நிலைமை சீராகும்? தொழிலில் சிறப்பான நிலை எப்போது ஏற்படும்? - வாசகர், சிவகங்கை மாவட்டம்

DIN

உங்களுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி. பூர்வபுண்ணியம் மற்றும் 6 ஆம் வீட்டுக்கதிபதியான சனிபகவான் உச்சம் பெற்றிருக்கிறார். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். மேலும் தொழில் ஸ்தானத்தில் சூரிய, செவ்வாய் பகவான்கள் திக்பலம் பெற்று அமர்ந்திருக்கிறார்கள். தன, வாக்கு ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார்.மேலும் பாக்கியாதிபதியை குருபகவான் சிறப்பு பார்வையாக பார்வை செய்கிறார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு தொடங்கும் லக்னாதிபதியின் தசையில் படிப்படியாக செய்தொழிலில் வளர்ச்சி அடையத் தொடங்கும். 2020 -ஆம் ஆண்டு தொடங்கியவுடன் கடன்கள் அனைத்தும் அடைந்து தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT