ஜோதிட கேள்வி பதில்கள்

எம்.எஸ்.சி. பி.எட்., முடித்து சுய தொழில் செய்து வரும் எனக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்குமா? எத்திசையில், எத்தகைய வாழ்க்கைத்துணை அமையும? பரிகாரங்கள் செய்துள்ளேன். வேறு ஏதேனும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா? - வாசகர், தர்மபுரி

DIN

உங்கள் ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மகர லக்னம், மீன ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்று அமர்ந்திருக்கும் புதபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதியும் பாக்கியாதிபதியும் சமசப்தம பார்வை செய்து கொள்வது சிறப்பாகும். இதனால் படித்த வேலையிலுள்ள பெண் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அமைந்து திருமணம் கைகூடும். உங்களுக்கு செவ்வாய்பகவான் சிம்ம ராசியில் இருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை. நீங்கள் செய்துவரும் தொழிலிலேயே நல்லபடியாக முன்னேற்றம் அடைந்து விடுவீர்கள். தெற்கு, தென்கிழக்கு திசையிலிருந்து பெண் அமைவார். அரசு வேலைக்கு வாய்ப்பு குறைவு. பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT