ஜோதிட கேள்வி பதில்கள்

என் சகோதரியின் மகள் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 6 வருடங்களாக வரன் பார்த்து வருகிறார்கள். எப்போது திருமணம் கைகூடும்? அந்த நாட்டிலேயே வரன் பார்க்கிறார்கள். நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். அக்கா, மாமா குடும்பத்தில் அனைவரின் உடல்நிலை எவ்வாறு இருக்கும்? 

DIN



உங்கள் சகோதரி மகளுக்கு மீன லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவானும் தன பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானும் தைரிய ஸ்தானத்தில் இணைந்து குருமங்கள யோகத்தைக் கொடுப்பது சிறப்பு. குருபகவானின் பார்வை களத்திரம், பாக்கியம் மற்றும் லாப ஸ்தானங்களின் மீது படிகிறது. அவருக்கு தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் சூரியபகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளது. தொடர்வதும் களத்திர ஸ்தானாதிபதியுடன் குடும்ப ஸ்தானத்தில் இணைந்திருக்கும் பூர்வபுண்ணியாதிபதியின் தசையாகவும் இருப்பதால் தொடர்ந்து நன்மைகள் உண்டாகும். அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அவர் வசிக்கும் நாட்டிலேயே வேலைப் பார்க்கும் உங்கள் குலத்திலேயே உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிதுர்தோஷம் இல்லை. பெற்றோருக்கு இறுதிவரை ஆதரவாக இருப்பார். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

- வாசகி, அம்பத்தூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT