ஜோதிட கேள்வி பதில்கள்

என்னுடைய சகோதரர் பல வழிகளிலும் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்தித்ததால் மனநோயாளியாகி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வருகிறார். ஞாபக மறதி நோயும் உள்ளது. பூரண குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளதா? திருமண வாழ்க்கை உண்டா? - வாசகர், திருச்சி

DIN

உங்கள் சகோதரருக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி மற்றும் அஷ்டம ஸ்தானாதிபதிôன செவ்வாய்பகவான் நீச்சம் பெற்று நீச்சபங்க ராஜயோகம் அடைந்து பூர்வபுண்ணியாதிபதியான சூரியபகவானுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதியான குருபகவான் லக்னாதிபதியின் சாரத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சனிபகவானையும் தைரிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். அதோடு தற்சமயம் குருபகவானின் தசை நடப்பதும் சிறப்பு. இதனால் உடல்நிலை சற்று முன்னேற்றமடைந்து சிறிய வேலைக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். களத்திர ஸ்தானாதிபதி சுப பலம் பெறாததால் திருமணத்திற்கு வாய்ப்பு குறைவு. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT