ஜோதிட கேள்வி பதில்கள்

நான் வாழ்க்கையில் இன்றுவரை இன்னல்களைத்தான் அனுபவித்து வருகிறேன். என்னுடைய எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? படித்த படிப்புக்கேற்ற வேலை வெளிநாட்டில் எப்போது கிடைக்கும்? குடும்பம் மேன்மை அடையுமா? - வாசகர், திட்டக்குடி

DIN

உங்களுக்கு மீன லக்னம், தனுசு ராசி. தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதியான சந்திரபகவான் மற்றும் ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம், அஷ்டம ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சூரியபகவானுடன் இணைந்திருக்கும் தன, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. செவ்வாய்பகவான் வர்கோத்தமத்தில் இருப்பதும் சிறப்பு. அதனால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு மறுபடியும் நல்ல வருமானம் வரும் வேலை கிடைக்கும். 2021- ஆம் ஆண்டு தொடங்கியவுடன் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் தேடிவரும். தொடர்ந்து யோக தசைகள் நடப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT