ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு நல்ல வேலை அமையவில்லை. எப்போது அமையும்? திருமணம் எப்போது கைகூடும்? பெற்றோரை காப்பாற்றுவேனா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?- வாசகர், தஞ்சாவூர்

DIN

உங்களுக்கு மிதுன லக்னம், மகர ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மிதுன ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய அயன ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் நீச்சம் பெற்று அந்த வீட்டுக்குரிய புதபகவானுடன் பரிவர்த்தனையில் இருப்பதால் நீச்சபங்க ராஜயோகம், பரிவர்த்தனை ராஜ யோகம் பெறுகிறார். அஷ்டம பாக்கியாதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் திக்பலம் பெற்றிருக்கிறார். தற்சமயம் குருபகவானின் தசையில் கேதுபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதிக்கேற்ற நிரந்தர வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். பெற்றோர்களுக்கு இறுதிவரை ஆதரவாக இருப்பீர்கள். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT