ஜோதிட கேள்வி பதில்கள்

நான் போட்டித்தேர்வுகளை (தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் மற்றும் ரயில்வே) எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த வேலை எப்பொழுது கிடைக்கும்? எந்த காலகட்டத்தில் திருமணம் கைகூடும்? எதிர்காலம் சரியாக அமைய என்ன பரிகாரங்கள் செய்யவேண்டும்?- வாசகர், திருச்சுழி

DIN

உங்களுக்கு மிதுன லக்னம், மகர ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சூரிய, கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய அயன ஸ்தனாதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. ஆறு மற்றும் பதினொன்றாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானத்தில் திக் பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின்  தசையில் லக்னாதிபதியின் புக்தி நடக்கிறது. அரசு கிரகங்கள் வலுவாக இருப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உத்தியோகம் கிடைக்கும். 2022 - ஆம் ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT