ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் முனைவர் படிப்பை எப்போது முடிப்பார்? வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா? திருமணம் சொந்தத்திலா அல்லது அந்நியத்திலா? எப்போது கைகூடும்? என் மகள் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பைப் படித்துள்ளார். அவருக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்?- வாசகர், கடலூர்

DIN

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கும்பராசி. லக்னாதிபதி தைரிய ஸ்தானத்தில் களத்திர நட்பு ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். சுகாதிபதி சூரியபகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று புத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் குருபகவான் நீச்சம் பெற்று அந்த வீட்டுக்கதிபதியான சனிபகவான் உச்சம் பெற்றிருப்பதால் குருபகவானுக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. தற்சமயம், உச்சம் பெற்ற தர்மகர்மாதிபதியான சனிபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி நடக்கிறது. அவரின் படிப்பு இன்னும் இரண்டாண்டுகளுக்குள் முடிந்து விடும். இந்த காலகட்டத்திற்கு படித்த பெண் தெற்கு திசையிலிருந்து தூரத்து உறவில் அமைந்து திருமணம் கைகூடும். அவரின் மணவாழ்க்கை சீராகவே அமையும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், தனுசு ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. அவருடன் பூர்வபுண்ணியாதிபதியும் கூடி இருக்கிறார். அவருக்கு அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அரசு வேலை கிடைக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள வரன் அந்நிய உறவில் தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT